யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வத்திராயன் பகுதியில் சுமார் 600 லிட்டர் கோடா, கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த உற்பத்தி நிலையம் நேற்றைய தினம் (08.09.2023) சுற்றிவளைக்கப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

