சுற்றுலா
சுற்றுலா
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
- by R P
- ஆடி 22, 2023
- 0 Comments
இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 7 இலட்சத்தைத் தாண்டியுள்ளது என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. நேற்று வரை 714,598 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சபை தெரிவித்துள்ளது.மேலும், கடந்த ஜூலை 20 நாட்களில் மட்டும் 90,724 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
24 சுற்றுலாத் தலங்கள அடையாளம்.
- by R P
- ஆடி 22, 2023
- 0 Comments
24 கரையோரப் பகுதிகள் சுற்றுலாத் தலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வகையில் தற்காலிகமாக இந்த சுற்றுலா தலங்களை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
கரையோரத்தில் சுற்றுலாத் தளங்களை உருவாக்கும், இலங்கை
- by R P
- ஆடி 15, 2023
- 0 Comments
இலங்கையின் கரையோரத்தில் உள்ள கவர்ச்சிகரமான இடங்களைக் கண்டறிந்து சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அவசர வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கடலோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பத்தரமுல்லை, செத்சிரிபாயவில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று(10) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்தார்.
புதிய விமான சேவை ஆரம்பம்.
- by R P
- ஆடி 11, 2023
- 0 Comments
சுற்றுலாவிற்க்கு வலு சேர்க்கும் வகையில் சினமன் எயார் தனது சேவையை தொடங்குகின்றது. இது இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள உள்ளூர் விமான தளங்களையும் சென்றடையும் வகையில் தனது சேவையை தொடங்கும் என்பதனால் சுற்றுலா வளர்ச்சி அடையக்கூடிய வகையில் இது வலு சேர்ப்பதாய் இருக்கும் என நம்பப்படுகின்றது.
