இரத்தினபுரி -உடவளவை நீர்த்தேக்கத்தை திறந்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என கிளிசொச்சி இரணைமடு விவசாய சம்மேளனம் தீர்மானித்திருந்தது. அதற்கமைவாக ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை இன்று மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக அனுப்பி வைத்துள்ளனர்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடரும் வரட்சி காரணமாக பல்வேறு இடங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு காணப்படுவதுடன் கால்நடைகளும் குடிநீரின்றி அலையும் நிலை உருவாகியுள்ளதாக தெரியவருகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் அம்பலப்பெருமாள் குளம், ஆரோக்கியபுரம், அமைதிபுரம், கோட்டைகட்டி, துணுக்காய், ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் நிலவும் வரட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு உருவாகியுள்ளது.