ஆடி 29, 2026
srilanka
0
  • Your cart is empty

வடக்கு

வடக்கு

உள்ளூர் செய்திகள் யாழ் வடக்கு

யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து விதிமீறல்

யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் குற்றச்சாட்டில் தினமும் சுமார் 200 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Read More
வடக்கு

சத்துருக்கொண்டான் படுகொலையின் 33ஆவது ஆண்டு நினைவுதினம்

சிறிலங்கா இராணும் மற்றும் ஊர்காவல் படையினரால் நிகழ்த்தப்ப்பட்ட மட்டக்களப்பு – சத்துருக்கொண்டான் படுகொலையின் 33ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று நினைவு கூரப்பட்டது. நீதி மறுக்கப்பட்டு வரும் சத்துருக்கொண்டான் படுகொலைக்கு சர்வதேச விசாரணை அவசியம் என படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர்.

Read More
வடக்கு

வடக்கு ஆளுநர் மாற்றம் தொடர்பில் வெளியான தகவல்

வடக்கு மாகாண ஆளுநர் விரைவில் மாற்றப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நீதியரசருமான சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதியை தனது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய பின் ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஒரு மாகாணத்திலுள்ள மக்களின் இலக்குகளை அடைவதற்கு மாகாண நிர்வாகம் சிறப்பாக இருப்பது அவசியம் என கருதப்படும் நிலையிலேயே ஆளுநர் மாற்றம் தொடர்பில் அவர் தெரிவித்துள்ளார்.

Read More
யாழ் வடக்கு

யாழில் ஆசிரியைக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் ஆசிரியை ஒருவரின் தங்கிச்சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச் சம்பவமானது 09.09.2023 பகல் இடம்பெற்றுள்ளது.

Read More
யாழ் வடக்கு

யாழில் அதிரடியாக முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வத்திராயன் பகுதியில் சுமார் 600 லிட்டர் கோடா, கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த உற்பத்தி நிலையம் நேற்றைய தினம் (08.09.2023) சுற்றிவளைக்கப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

Read More
உள்ளூர் செய்திகள் வடக்கு

வடக்கை குறிவைத்து நியமிக்கபடும் நூற்றுக்கணக்கான பெரும்பான்மை இனத்தவர்கள்

வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் பணியாற்றுவதற்காக நூற்றுக்கணக்கான பெரும்பான்மை இனத்தவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக நம்பகரமாக அறியமுடிகிறது. ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தொல்பொருள் திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவகத்தின் கீழ் பணியாற்ற 30 வரையான பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Read More
உள்ளூர் செய்திகள் யாழ் வடக்கு

ஐக்கிய அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் ஆய்வு விஞ்ஞானியாக நியமிக்கப்பட்ட யாழ் நபர்

ஹாட்லிக் கல்லூரி A/L92 மாணவனும், யாழ் பல்கலைக்கழக பௌதிகவியற் பேராசிரியருமான கந்தசாமி விக்னரூபன் பல்கலைக்கழகத்தில் ஆய்வு விஞ்ஞானியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் யாழ் பருத்தித்துறை, வரணியைச் சேர்ந்த நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர் ஐக்கிய அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் ஆய்வு விஞ்ஞானியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Read More
உள்ளூர் செய்திகள் பொருளாதாரம் வடக்கு

கிளிநொச்சியில் வடக்கு தென்னை முக்கோண வலயத்தை உருவாக்குவதன் அங்குரார்ப்பண நிகழ்வு

கிளிநொச்சியில் வடக்கு தென்னை முக்கோண வலயத்தை உருவாக்குவதன் அங்குரார்ப்பண நிகழ்வும், சர்வதேச தென்னை விழா மற்றும் தென்னை வளர்ப்பாளர்களை கெளரவிக்கும் நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பளை மாதிரி தென்னை தோட்டம் பகுதியில் குறித்த நிகழ்வு இன்று (02.09.2023) நடைபெற்றுள்ளது.  இந்நிகழ்வில் அமைச்சர் ரமேஸ் பத்திரன, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லொஹான் ரத்வத்த, நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், தெங்கு அபிவிருத்தி சபை அதிகாரிகள், தென்னை உற்பத்தியாளர்கள் என பலரும்

Read More
யாழ் வடக்கு

24 மணிநேர சேவையாக மாற்றப்படும் யாழ் பேருந்து நிலையம்

வட பகுதியின் போக்குவரத்து மையமாகவும் நாளாந்தம் பல ஆயிரக் கணக்கான பொதுமக்கள் தமது போக்குவரத்து தேவைக்கான மையமாகவும் பயன்படுத்தி வரும் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் இன்றுமுதல் 24 மணி நேர சேவையை வழங்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய பிராந்தியத்தின் செயலாற்று முகாமையாளர்  தெரிவித்துள்ளார்.

Read More