யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து விதிமீறல்
யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் குற்றச்சாட்டில் தினமும் சுமார் 200 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யாழ்
யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் குற்றச்சாட்டில் தினமும் சுமார் 200 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் ஆசிரியை ஒருவரின் தங்கிச்சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச் சம்பவமானது 09.09.2023 பகல் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வத்திராயன் பகுதியில் சுமார் 600 லிட்டர் கோடா, கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த உற்பத்தி நிலையம் நேற்றைய தினம் (08.09.2023) சுற்றிவளைக்கப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
ஹாட்லிக் கல்லூரி A/L92 மாணவனும், யாழ் பல்கலைக்கழக பௌதிகவியற் பேராசிரியருமான கந்தசாமி விக்னரூபன் பல்கலைக்கழகத்தில் ஆய்வு விஞ்ஞானியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் யாழ் பருத்தித்துறை, வரணியைச் சேர்ந்த நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர் ஐக்கிய அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் ஆய்வு விஞ்ஞானியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
வட பகுதியின் போக்குவரத்து மையமாகவும் நாளாந்தம் பல ஆயிரக் கணக்கான பொதுமக்கள் தமது போக்குவரத்து தேவைக்கான மையமாகவும் பயன்படுத்தி வரும் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் இன்றுமுதல் 24 மணி நேர சேவையை வழங்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய பிராந்தியத்தின் செயலாற்று முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமான இன்று 24 முதல் மீண்டும் ஆரம்பித்துள்ளது. குமுதினிப் படகு பழுதடைந்த நிலையில் திருத்த வேலைகளின் பின்னர் குறிகட்டுவானில் தரித்துவிடப்பட்டிருந்தது. நேற்று 23 மாலை குறிகட்டுவானில் இருந்து பயணிகளை ஏற்றியவாறு நெடுந்தீவு சென்று தரித்ததுடன் இன்று 24 காலை 7 மணிக்கு நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் நோக்கிப் புறப்பட்டு அங்கிருந்து மீண்டும் நெடுந்தீவுக்கு பயணித்தது.
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவ பெரும் திருவிழா ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் திருவிழாவில் சிறுவர்களை வைத்து சாகச நிகழ்ச்சிகளை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
யாழ். நகர்ப் பகுதி முச்சக்கர வண்டித் தரிப்பிடத்தில் இருந்து கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகளை அகற்றும் நடவடிக்கையை யாழ் போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்தனர். யாழ். நகர் பகுதியில் வியாழக்கிழமை காலை முதல் பொலிஸார் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.