யாழ் – சென்னை விமான சேவை
யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை தொடர்பிலான புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவின் அலையன்ஸ் எயார் நிறுவனம் நாளாந்த விமான சேவைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்
யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை தொடர்பிலான புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவின் அலையன்ஸ் எயார் நிறுவனம் நாளாந்த விமான சேவைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்வையிட வந்தவர்களிடமிருந்து அவர்களிடமிருந்து சாராய போத்தல்கள், கள்ளு மற்றும் போதை பாக்குகள் மீட்கப்பட்டுள்ளதாக போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். நேற்றையதினம் நோயாளிகளை பார்வையிட வந்தவர்களின் பைகள், கைப்பைகள் திடீர்சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே மேற்படி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான இரண்டாவது நாளாக இன்றும் யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. கொழும்புக்கு சென்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மூலம் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளக் கூடிய அனைத்து சேவைகளையும் கொழும்புக்கு வராமல் யாழ்ப்பாணத்திலேயே பெற்றுக்கொள்ளுவதற்கான வாய்ப்பை குளோபல் ஃபேர்-2023 வழங்குகிறது.
ஈழத்தின் பஞ்சஈச்சரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தின் ஆதீனகர்த்தா ராஜராஜஶ்ரீ கு. நகுலேஸ்வரக்குருக்கள் (வயது 98) இறையடி சேர்ந்தார்.
கொழும்பு – யாழ்ப்பாணம் தொடருந்து சேவைக்கான கட்டணப்பட்டியலை ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ளது. இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே இந்த கட்டணப்பட்டியல் வெளியிட்டுள்ளது. நகரசேர்கடுகதி தொடருந்து சேவை அடுத்த மாதம் (ஒகஸ்ட்) ஆரம்பமாகும் அதற்கான கட்டணம் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு யாழ்ப்பாணம் ஓடிசி என்ற சொகுசு தொடருந்து சேவை ஆரம்பிக்கவாய்ப்புள்ளது. இந்த நிலையில் அதற்கான கட்டணம் 4,000 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தொடருந்து சேவை கட்டணங்கள் வருமாறு, உத்தரதேவி தொடருந்து: 1 ஆம்
யாழில் இருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் அகதிகளாகத் தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்துள்ளதாகத் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்றைய தினம் (15.08.2023) தனுஷ்கோடியில் தஞ்சமடைவார்களைப் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியும் அதனது தாய்க் கல்வி நிறுவனமான பற்றிக்கோட்ட செமினரியினதும் 200ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பழைய மாணவர் ஒன்றுகூடல் வாரம் ஆரம்பமானது. ஆரம்ப நிகழ்வாகப் பழைய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனபவனி இன்று (15.07.2023) காலை 7 மணியளவில் கல்லூரி வாயிலில் இருந்து ஆரம்பமாகி, கோட்டைக்காடு, அராலி, செட்டியார்மடம், துணவி, நவாலி, ஆனைக்கோட்டை, மானிப்பாய், சண்டிலிப்பாய், பண்டத்தரிப்பு, சித்தங்கேணி, வட்டுகோட்டை வழியாக யாழ்ப்பாணக் கல்லூரியினை வந்தடைந்தது.
கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி விசேட தொடருந்து இன்று வியாழக்கிழமை(13) பயணித்தது. இந்த விசேட தொடருந்து ல் போக்குவரத்து, பெருந் தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன உட்பட்ட ரயில்வே திணைக்கள அதிகாரிகள் அனுராதபுரம்- வவுனியா வரையில் அமைக்கப்பட்ட புதிய தொடருந்து பாதை அமைப்பின் கண்காணிப்பு நடவடிக்கையாக யாழ்ப்பாணம் வருகை தந்தனர்.
எதிர்வரும் சனிக்கிழமை (15) அநுராதபுரத்துக்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசந்துறை வரையிலான ரயில் சேவைகள் வழமையான நேர அட்டவணைப்படி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
சுற்றுலாவிற்க்கு வலு சேர்க்கும் வகையில் சினமன் எயார் தனது சேவையை தொடங்குகின்றது. இது இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள உள்ளூர் விமான தளங்களையும் சென்றடையும் வகையில் தனது சேவையை தொடங்கும் என்பதனால் சுற்றுலா வளர்ச்சி அடையக்கூடிய வகையில் இது வலு சேர்ப்பதாய் இருக்கும் என நம்பப்படுகின்றது.