ஆடி 29, 2026
srilanka
0
  • Your cart is empty
உள்ளூர் செய்திகள் யாழ் வடக்கு

கொழும்பு – யாழ்ப்பாணம் தொடருந்து சேவை கட்டணங்கள்

கொழும்பு – யாழ்ப்பாணம் தொடருந்து சேவைக்கான கட்டணப்பட்டியலை ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே இந்த கட்டணப்பட்டியல் வெளியிட்டுள்ளது.

நகரசேர்கடுகதி தொடருந்து சேவை அடுத்த மாதம் (ஒகஸ்ட்) ஆரம்பமாகும் அதற்கான கட்டணம் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மற்றொரு யாழ்ப்பாணம் ஓடிசி என்ற சொகுசு தொடருந்து சேவை ஆரம்பிக்கவாய்ப்புள்ளது.

இந்த நிலையில் அதற்கான கட்டணம் 4,000 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தொடருந்து சேவை கட்டணங்கள் வருமாறு,

உத்தரதேவி தொடருந்து:

1 ஆம் வகுப்பு – 3200.00

2 ஆம் வகுப்பு – 2500.00

3 ஆம் வகுப்பு – 1800.00

யாழ்தேவி தொடருந்து:

1 ஆம் வகுப்பு – 2800.00

2 ஆம் வகுப்பு – 1900.00

இரவு தபால் தொடருந்து:

1 ஆம் வகுப்பு – 3200.00

2 ஆம் வகுப்பு – 2200.00

Leave feedback about this