யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து விதிமீறல்
யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் குற்றச்சாட்டில் தினமும் சுமார் 200 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உள்ளூர் செய்திகள்
யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் குற்றச்சாட்டில் தினமும் சுமார் 200 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 13ஆம் திகதி வழங்கப்படும் விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 18ஆம் திகதி கற்றல் செயற்பாடுகள் நடைபெறும் என கல்வி அமைச்சின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் நாகைக்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையானது நாளை வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தப்படும் என இந்திய துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த 14 ஆம் திகதி தமிழ்நாட்டின் நாகபட்டினம் துறைமுகத்தில் இருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பித்ததது.
சீனா தனது முதல் கடல் கடந்த அதிவேக தொடருந்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தொடருந்து பாதையானது பெய்ஜியான் மாகாணத்தின் ஃபுசோ தொடங்கி தைவான் ஜலசந்திக்கு அருகேயுள்ள சியாமன் பகுதியை இணைக்கும் வகையில் அமைந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வரட்சியான காலநிலை நிலவிய மாதங்களில் அனல் மின் உற்பத்திக்கான செலவீனங்களை ஈடுசெய்ய வேண்டியதன் அவசியத்தை காரணம் காட்டி, மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபையானது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படவிருந்த மின் கட்டண உயர்வை அக்டோபர் மாதமே தாம் கோரியுள்ளதாக மின்சாரசபையின் பொது மேலாளர் நரேந்திர டி சில்வா தெரிவித்துள்ளார்.
தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்குள் பிரவேசிப்பதற்கு எதிர்வரும் (01.10.2023) ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்குள் பிரவேசிப்பதற்கு எதிர்வரும் (01.10.2023) ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் வறண்ட பிரதேசத்தில் மக்களின் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் வெலிமஸ்ஸ என்ற ஒட்டுண்ணி பூச்சியினால் பரவும் கொடிய தோல் நோய் தொடர்பில் சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நாட்களில் பொதுவாக ஹசலக்க மற்றும் மஹியங்கனை பிரதேசங்களில் காணப்படும் இந்த பூச்சி நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இனங்காணப்படலாம்.
ஸ்டார் படங்கள் வரும்போது அந்த அலையில் நல்ல சிறு படங்கள் அடித்துப் போவது வாடிக்கையாகிவிட்டது என தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சுரேஷ் காமாட்சி தனது முகநூல் பக்கத்தில், “வருடம் என்றிருந்தது மாதங்களாகிவிட்டது. மாதங்கள் குறுகி வாரங்களாகிவிட்டது. மாதங்களும் குறுகி நாட்களாகிவிட்டன. நான் ஏதோ நாட்காட்டி குறித்துப் பேசவில்லை. திரையரங்கங்களில் நாம் வெளியிடும் சினிமாவின் ஆயுட்காலம் இது. நூற்றாண்டுகள் வாழும் என நினைப்பது புற்றீசலின் ஒற்றை நாள் வாழ்க்கை முறைக்குத்