புரட்டாதி 13, 2026
srilanka
0
  • Your cart is empty

உள்ளூர் செய்திகள்

உள்ளூர் செய்திகள்

உள்ளூர் செய்திகள் பொருளாதாரம்

இலங்கைக்கு கிடைத்துள்ள பெருந்தொகை வருமானம்

இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில் பாக்கு ஏற்றுமதி மூலம் 10,566 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. இதே காலகட்டத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட பாக்கின் அளவு 7648 மெட்ரிக் தொன் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More
உள்ளூர் செய்திகள்

இலங்கையில் பாடசாலை மாணவர்களிடையே அதிகரித்துள்ள நோய்கள்

இலங்கையில் பாடசாலை மாணவர்களிடையே வாய் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவதாக பல் மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, பாடசாலை மாணவர்களில் 63 சதவீதமானோருக்கு பற்கள் சிதைவடைவதாக பல் மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அவர்களில் சுமார் 96 சதவீதமானோர் சரியான சிகிச்சை பெறுவதில்லை எனவும் குறித்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் மஞ்சுள ஹேரத் தெரிவித்துள்ளார். 

Read More
உள்ளூர் செய்திகள்

சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ள ரணில்

சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக அதிபர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் குறித்த பயணம் மேற்கொள்ளவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
உள்ளூர் செய்திகள் வடக்கு

வடக்கை குறிவைத்து நியமிக்கபடும் நூற்றுக்கணக்கான பெரும்பான்மை இனத்தவர்கள்

வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் பணியாற்றுவதற்காக நூற்றுக்கணக்கான பெரும்பான்மை இனத்தவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக நம்பகரமாக அறியமுடிகிறது. ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தொல்பொருள் திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவகத்தின் கீழ் பணியாற்ற 30 வரையான பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Read More
உள்ளூர் செய்திகள் பொருளாதாரம்

உலக சந்தையில் குறைவடைந்துள்ள மசகு எண்ணெயின் விலை

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறைவடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த நாட்களை விட இன்று சனிக்கிழமை (09.09.2023) மசகு எண்ணெய்யின் விலை குறைவடைந்துள்ளது. அதன்படி, பிரென்ட் (BERNT) மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 89.37 டொலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.05 டொலராகவும் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Read More
உள்ளூர் செய்திகள் பொருளாதாரம்

இலங்கையில் அனைத்து அரசாங்க கொடுக்கல் வாங்கல்களும் டிஜிட்டல் மயமாக்கப்படும்

தொழில்நுட்ப அமைச்சின் கீழுள்ள DigiEcon 2030 இன் திட்டப் பணிப்பாளர் பிரசாத் சமரவிக்ரம அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் திகதிக்குள் இலங்கையில் அனைத்து அரசாங்க கொடுக்கல் வாங்கல்களும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என தெரிவித்துள்ளார். கொவிட் 19 தொற்றுநோய்க்குப் பின்னர் இலங்கையில் பெரும்பான்மையான மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே இந்த நடவடிக்கையை விரைவுபடுத்துவதற்கான காரணம் எனக் குறிப்பிடப்படுகிறது. டிஜிட்டல் மயமாக்கலை விரைவுபடுத்தும் வகையில் தேசிய டிஜிட்டல் பொருளாதார முடுக்கம் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

Read More
உள்ளூர் செய்திகள்

நீதி அமைச்சரின் விசேட வர்த்தமானி அறிவிப்பு

நீதி அமைச்சர் விசேட வர்த்தமானி அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளார். வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ஊழல் ஒழிப்பு சட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Read More
உள்ளூர் செய்திகள் யாழ் வடக்கு

ஐக்கிய அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் ஆய்வு விஞ்ஞானியாக நியமிக்கப்பட்ட யாழ் நபர்

ஹாட்லிக் கல்லூரி A/L92 மாணவனும், யாழ் பல்கலைக்கழக பௌதிகவியற் பேராசிரியருமான கந்தசாமி விக்னரூபன் பல்கலைக்கழகத்தில் ஆய்வு விஞ்ஞானியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் யாழ் பருத்தித்துறை, வரணியைச் சேர்ந்த நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர் ஐக்கிய அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் ஆய்வு விஞ்ஞானியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Read More
உள்ளூர் செய்திகள்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் அமைச்சர் வெளியிட தகவல்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வெளியாகும் என அமைச்சர்  சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பண்டாரவளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சை திகதி இதேவேளை இவ்வருடத்திற்கான உயர்தரப் பரீட்சை திகதியை மாற்றுவது குறித்து எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Read More
உள்ளூர் செய்திகள்

ஐ. நா. சபை கூட்டத்தில் உரையாற்றவுள்ள ரணில்

அமெரிக்காவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 78ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

Read More