மன்னர் சார்லஸின் பிறந்தநாளில் நாற்பதிற்கு மேற்பட்ட இந்தியர்களுக்கு கௌரவ விருது!
பிரித்தானிய மன்னர் சார்லஸின் பிறந்தநாளை முன்னிட்டு, 40க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு கௌரவ விருது அளிக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. நவம்பர் மாதம் 14ஆம் திகதி மன்னர் சார்லஸ் தனது 75வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதனை வெகுவிமர்சியாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்திய வம்சாவளியினர் சிறப்பிக்கப்பட உள்ளனர். அதாவது, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்த 40க்கும் மேற்பட்டோருக்கே கௌரவ விருது அளிக்கப்பட உள்ளது. இதற்காக பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.
