ஆடி 29, 2026
srilanka
0
  • Your cart is empty

வடக்கு

வடக்கு

உள்ளூர் செய்திகள் வடக்கு

இந்திய வர்த்தக் குழு யாழிற்கு வருகை.

இந்திய வர்த்தக குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். அந்த வர்த்தக குழு வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் மாகாண அரசாங்க அதிகாரிகளை திங்கட்கிழமை சந்தித்து மாகாணத்தில் பல்வேறு துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சந்திப்பின் போது கைத்தொழில், நகர அபிவிருத்தி அதிகார சபை, முதலீட்டு சபை, கூட்டுறவு, பால் பண்ணை மற்றும் கால்நடை பராமரிப்பு ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள்

Read More
உள்ளூர் செய்திகள் யாழ் வடக்கு

சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவருக்கு பதவி உயர்வு

யாழ்.பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளரான தனேஸ்வரி இரவீந்திரன் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. வணிக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரைப் பேராசிரியராகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

Read More
உள்ளூர் செய்திகள் யாழ் வடக்கு

யாழ் முத்தமிழ் விழா

யாழ்பாண மாநகர சபையின் முத்தழிழ் விழா இன்றைய தினம்(29) 4.30 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது. ஐ.பி. சி தமிழின் அணுசரனையின் கீழ் துர்க்காதேவி மணி மண்டபத்தில் யாழ் மாநகர சபயின் ஆணையாளர் இ. த. ஜெயசீலன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றுக்கொண்டுள்ளது. இவ்விழாவில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுனர் திருமதி பி.எஸ். எம் சார்ள்ஸ், சிறப்பு விருந்தினர்களாக ஐ.பி.சி தமிழ் குழுமத்தின் தலைவர் க.பாஸ்கரன், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் ஆகியோர் கலந்து விழாவை சிறப்பித்துக் கொண்டுள்ளனர்.

Read More
உள்ளூர் செய்திகள் கிளிநொச்சி முல்லைத்தீவு வடக்கு

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடரும் வரட்சி காரணமாக பல்வேறு இடங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு காணப்படுவதுடன் கால்நடைகளும் குடிநீரின்றி அலையும் நிலை உருவாகியுள்ளதாக தெரியவருகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் அம்பலப்பெருமாள் குளம், ஆரோக்கியபுரம், அமைதிபுரம், கோட்டைகட்டி, துணுக்காய், ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் நிலவும் வரட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு உருவாகியுள்ளது.

Read More
யாழ் வடக்கு

யாழ். தொழில்நுட்பவியல் கல்லூரியின் வருடாந்த விளையாட்டு விழா

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் வருடாந்த விளையாட்டு விழா இன்று காலை 09 மணியளவில் தொழில்நுட்பவியல் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரபல தொழிலதிபரும், சமூக செயற்பாட்டாளரும், ஐபிசி தமிழ் மற்றும் லங்காசிறி ஊடகக்குழுமத்தின் தலைவருமான  கந்தையா பாஸ்கரன் கலந்து சிறப்பிக்கின்றார்.

Read More
ஆன்மீகம் சைவம் / இந்து பதாகை யாழ் வடக்கு

நல்லூர் கந்தன் ஆலய மகோற்சபம்

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா ஓகஸ்ட் 21ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.இந்நிலையில் நல்லூர் கந்தன் திருவிழா ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பில் யாழ்ப்பாண மாநகர சபையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. யாழ் மாநகர சபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன் தலைமையில் கலந்தூரையாடல் நடைபெற்றது. கலந்துரையாடலில் பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டது. அதன் படி, ஓகஸ்ட் 20ஆம் திகதி காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, செப்டம்பர் 16ஆம் திகதி வைரவர்

Read More
உள்ளூர் செய்திகள் வடக்கு

தேசிய அடையாள அட்டையின் ஒருநாள் சேவை குருநாகலில் ஆரம்பம்

இலங்கையில் தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் சேவையின், ஒருநாள் சேவையை வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் குருநாகலையில் பெற்றுகொள்ளலாம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(19) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளைக்கான கேள்வி நேரத்தின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Read More
யாழ் வடக்கு

மதுரையிலிருந்தும் பலாலிக்கு விமான சேவை

மதுரையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விரைவில் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையிலான விமான சேவை விஸ்தரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Read More
உள்ளூர் செய்திகள் கல்வி யாழ் வடக்கு

யாழ்.பல்கலைக்கழக 37வது பட்டமளிப்பு விழா

யாழ்.பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா ஆரம்பமாகியுள்ளது. பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமையில் இன்று ஆரம்பமானது. பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மூன்று நாள்களில் 8 அமர்வுகளாக இடம்பெறவுள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் 2 ஆயிரத்து 278 பேர் பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும் பெறவுள்ளனர்.

Read More
உள்ளூர் செய்திகள் யாழ் வடக்கு

யாழில் இரவு ஏற்பட்ட பதற்ற நிலை

யாழ் நாவாந்துறை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.இச்சம்பவம்  17-08-2023 இரவு ஏற்பட்டுள்ளது.சம்பவ இடத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

Read More