ஆடி 29, 2026
srilanka
0
  • Your cart is empty

வடக்கு

வடக்கு

வடக்கு

வடக்கு கிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்

இலங்கையின் வடக்கு கிழக்கில் நீண்ட காலமாக பணியற்றி வருகின்ற தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்  வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் சுமார் 60 ஆசிரியர்களும் கிழக்கு மாகாணத்தில் சுமார் 187 ஆசிரியர்களும் நீண்டகாலமாக நிரந்தர நியமனம்  இன்றி தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார். 

Read More
யாழ் வடக்கு

மீண்டும் சேவையை ஆரம்பித்த குமுதினிப் படகு

நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமான இன்று  24 முதல் மீண்டும் ஆரம்பித்துள்ளது. குமுதினிப் படகு பழுதடைந்த நிலையில் திருத்த வேலைகளின் பின்னர் குறிகட்டுவானில் தரித்துவிடப்பட்டிருந்தது. நேற்று 23 மாலை குறிகட்டுவானில் இருந்து பயணிகளை ஏற்றியவாறு நெடுந்தீவு சென்று தரித்ததுடன் இன்று 24 காலை 7 மணிக்கு நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் நோக்கிப் புறப்பட்டு அங்கிருந்து மீண்டும் நெடுந்தீவுக்கு பயணித்தது.

Read More
உள்ளூர் செய்திகள் வடக்கு

வட மாகாணத்தில் சவாலான நிலையில் வைத்தியசாலைகள்

வட மாகாணத்தில் ஒருவருடத்தில் 50 வைத்தியர்களும் 20 தாதியர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வட மாகாண சுகாதார பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வவுனியா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வட மாகாணத்தில் ஒரு வருட காலப்பகுதியில் 50 இற்கும் அதிகமான வைத்தியர்களும் 20 தாதியர்களும் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.. வைத்தியர்களும் தாதியர்களும் வெளியேறுவது எமக்க ஒரு சவாலான விடயம். அதுமாத்திரமல்லாமல் அண்மைக்காலங்களில் கோவிட் தொற்று மற்றும்

Read More
உள்ளூர் செய்திகள் கிளிநொச்சி வடக்கு

ஜனாதிபதிக்கு கடிதம்

இரத்தினபுரி   -உடவளவை நீர்த்தேக்கத்தை திறந்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என  கிளிசொச்சி இரணைமடு விவசாய சம்மேளனம் தீர்மானித்திருந்தது. அதற்கமைவாக ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை இன்று மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக அனுப்பி வைத்துள்ளனர்.

Read More
உள்ளூர் செய்திகள் யாழ்

திருவிழாவில் தடை

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவ பெரும் திருவிழா   ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி  ஆரம்பமாகவுள்ள  நிலையில் திருவிழாவில் சிறுவர்களை வைத்து சாகச நிகழ்ச்சிகளை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

Read More
யாழ்

யாழில் அதிரடி சோதனை

யாழ். நகர்ப் பகுதி முச்சக்கர வண்டித் தரிப்பிடத்தில் இருந்து கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகளை அகற்றும் நடவடிக்கையை யாழ் போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்தனர். யாழ். நகர் பகுதியில் வியாழக்கிழமை காலை முதல் பொலிஸார் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Read More
யாழ் வடக்கு

யாழ் போதனா வைத்தியசாலையில் கண்புரை சத்திரசிகிச்சை.

யாழ் போதனா வைத்தியசாலையில் கண்புரை சத்திரசிகிச்சையினை முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. யாழ் போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகள் கண்சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி மலரவன் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சத்திரசிகிச்சை திட்டமானது ஐக்கிய இராச்சியத்தின் Assist RR நிறுவனத்தினால் ஒருங்கிணைக்கப்படுவதுடன் சத்திர சிகிச்சைகளுக்கான கண்வில்லைகளும், சத்திரசிகிச்சை நுகர்வு பொருட்களும் மற்றும் மருந்துப் பொருட்களும் மலேசியாவைச் சேர்ந்த அலாக்கா மற்றும் ஆனந்தா நிறுவனத்தினரால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டியவர்கள் பரிசோதனை முகாமில்

Read More
உள்ளூர் செய்திகள் யாழ் வடக்கு

யாழ்ப்பாணம் கோண்டாவில் தீ

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் உள்ள கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டதனால் பரபரப்பு ஏற்படுள்ளது.குறித்த தீ விபத்து இன்று வியாழக்கிழமை நண்பகல்  ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவ்விடத்திற்கு சென்ற யாழ் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீப்பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் தீ விபத்து ஏற்பட்டமைக்கான  காரணம்  வெளியாகவில்லை.

Read More
உள்ளூர் செய்திகள் மன்னார் முல்லைத்தீவு யாழ் வடக்கு

இரண்டாவது தென்னை முக்கோண வலயம்!

பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவை மையமாக கொண்டு வட மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோண வலயத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதுத் தெரிவித்துள்ளார்.

Read More