ஆடி 29, 2026
srilanka
0
  • Your cart is empty
உள்ளூர் செய்திகள் வடக்கு

வட மாகாணத்தில் சவாலான நிலையில் வைத்தியசாலைகள்

வட மாகாணத்தில் ஒருவருடத்தில் 50 வைத்தியர்களும் 20 தாதியர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வட மாகாண சுகாதார பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வட மாகாணத்தில் ஒரு வருட காலப்பகுதியில் 50 இற்கும் அதிகமான வைத்தியர்களும் 20 தாதியர்களும் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.. வைத்தியர்களும் தாதியர்களும் வெளியேறுவது எமக்க ஒரு சவாலான விடயம்.

அதுமாத்திரமல்லாமல் அண்மைக்காலங்களில் கோவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆரம்பிக்கப்பட வேண்டிய தாதிய பயிற்சிகள் இன்னமும் ஆரம்பிக்கப்படாமல் உள்ளது.

இந்த வருடம் (2023) தாதிய கல்லூரியில் படித்து வெளியேறுபவர்கள் இருந்தாலும் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு தாதிய பயிற்சிகள் இடம்பெறாத நிலை உருவாகியுள்ளது.

Leave feedback about this