100 ஆண்டுகளாக உலகின் முதல் நாடாக கோலோச்சிய சீனாவை முறியடித்த இந்தியா…!
மக்கள் தொகையில் கடந்த 100 ஆண்டுகளாக உலகின் முதல் நாடாக இருந்த சீனாவை, இந்தியா முந்தியுள்ளது.
சீனாவில் மக்கள் தொகை குறைந்துள்ள நிலையில், தற்போது திருமண பதிவுகளின் எண்ணிக்கையும் சரிந்துள்ள நிலையில், இந்த மாற்றம் பதிவாகியுள்ளது.
2022இல், கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக சீனாவின் மக்கள் தொகை 8.5 லட்சம் அளவுக்கு சரிந்து, 141.1 கோடியாக குறைந்தது.
அதே சமயத்தில் இந்தியாவின் மக்கள் தொகை 142 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சீனாவில் நடைபெறும் திருமணங்களின் மொத்த எண்ணிக்கை, 2022இல், 68.3 லட்சமாக, 2021இன் அளவை விட 8 லட்சம் அளவுக்கு குறைந்துள்ளதாக சீன உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக திருமண பதிவுகள் தொடர்ந்து சரிந்து வருவதாகவும், கொரோனா கால ஊரடங்குகளினால், திருமணங்களின் எண்ணிக்கை வெகுவாக சரிந்துள்ள தாகவும் கூறப்படுகிறது.
சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் கடந்த ஆண்டு 1,000 பேருக்கு 6.77 குழந்தைகளாகக் குறைந்துள்ளது. இது 2021இல் 7.52 ஆக இருந்தது.

