பொழுதுபோக்கு

டிமாண்டி காலனி 2’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது

டிமாண்டி காலனி 2’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான படம் டிமாண்டி காலனி. ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்ற இத்திரைப்படத்தின் 2ஆம் பாகம் சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து 2ஆவது பாகத்தையும் இயக்கவுள்ளார். அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படியிருக்க இத்திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இத்திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version