யாழ் தேவி ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றி..!
இந்திய கடன் உதவி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட யாழ் தேவி ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது அந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரயில் அனுராதாபுரம் ரயில் நிலையத்திலிருந்து வவுனியா ஓமந்தை ரயில் நிலையம் வரை செல்லும் என்றும் 100 கிலோமீட்டர் வேகத்தில் இந்த ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உதவியால் இயங்கக்கூடிய இந்த ரயிலால் மக்கள் மிகப்பெரிய அளவில் பலன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
