பொழுதுபோக்கு

டொவினோ தாமஸ் நடிக்கும் ‘நடிகர் திலகம்’!

மலையாள நடிகர் டொவினோ டாமஸ் நடிப்பில் ‘நடிகர் திலகம்’ எனும் திரைப்படம் உருவாகவுள்ளது.

இயக்குநர் லால் இயக்கத்தில் நடிகர்கள் டொவினோ தாமஸ், சௌபின் சாகிர் நடிப்பில் ‘நடிகர் திலகம்’ எனும் படத்தின் படப்பிடிப்பு இன்று(ஜூலை 11) தொடங்கப்பட்டுள்ளது. மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தத் திரைப்படம் நடிகர் டேவிட் படிக்கலின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படமாகும்.

ஆல்பி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு யக்‌ஷன் கேரி பெரெய்ரா இசையமைக்கிறார். இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு மலையாள ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. மறுபக்கம் டோவினோ தாமஸ் நடிப்பில் ‘அஜயண்டே ரண்டம் மோஷனம்’ எனும் 3டி படமும் ரிலீஸுக்கு தயாராகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version