பொழுதுபோக்கு

துருவ நட்சத்திரம்’ படத்தின் செகண்ட் சிங்கிள் புரோமோ வெளியானது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடலின் புரோமோ அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்தப் படம் வெகு ஆண்டுகளாக ரிலீஸாகாமல் இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் ரிலீஸுக்கு ஆய்த்தமாகியுள்ளது. அதைத் தொடர்ந்து அந்தப் படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடலான ‘ஹிஸ் நேம் இஸ் ஜான்( His Name is John)’ எனும் பாடலின் புரோமோ தற்போது அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பாடலை தாமரை எழுதியுள்ளார். இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் விரைவில் வெளியாகுமென ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Exit mobile version