இந்திய மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2ஆம் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேரமுடிவில், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஒரு விக்கெட்டை இழந்து 86 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முன்னதாக, இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில், சகல விக்கட்டுக்களையும் இழந்து 438 ஓட்டங்களைப் பெற்றது.
விராட் கோலி, அதிகபட்சமாக 121 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். தமது 500ஆவது சர்வதேச கிரிக்கட் போட்டியில் விளையாடும் விராட் கோலி 76 ஆவது சர்வதேச சதத்தையும், 29ஆவது டெஸ்ட் சதத்தையும் பதிவுசெய்துள்ளார்.

