ஆனி 5, 2026
srilanka
0
  • Your cart is empty

உள்ளூர் விளையாட்டு

விளையாட்டு

உள்ளூர் விளையாட்டு சுற்றுலா பொருளாதாரம்

கரையோரத்தில் சுற்றுலாத் தளங்களை உருவாக்கும், இலங்கை

இலங்கையின் கரையோரத்தில் உள்ள கவர்ச்சிகரமான இடங்களைக் கண்டறிந்து சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அவசர வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கடலோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பத்தரமுல்லை, செத்சிரிபாயவில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று(10) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்தார்.

Read More
உள்ளூர் செய்திகள் உள்ளூர் விளையாட்டு மட்டைப்பந்து விளையாட்டு

தகுதிகாண் போட்டிகளுக்காக சிம்பாப்வே நோக்கி மேலும் மூன்று இலங்கை வீரர்கள் பயணம்!

உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்து கொள்வதற்காக மேலும் மூன்று வீரர்களை சிம்பாப்வேக்கு அனுப்ப சிறிலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது. அதன்படி , டில்ஷான் மதுஷங்க, துனித் வெல்லாலகே மற்றும் சஹான் ஆராச்சி ஆகிய மூவரும் சிம்பாப்வேயில் தமது அணியுடன் இணைந்து கொள்ள எதிர்வரும் 23 ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்படவுள்ளனர். ‘standby options´ எனப்படும் வழக்கமான வீரர் காயம் அடைந்தால் அவருக்கு பதிலாக அணியில் சேர்க்க குறித்த மூன்று

Read More
உள்ளூர் செய்திகள் உள்ளூர் விளையாட்டு பிற விளையாட்டுகள் விளையாட்டு

இந்திய திறந்த சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டியில் இலங்கை வீரர்களுக்கு 11 பதக்கங்கள்!

இந்தியாவின் புதுடெல்லி இல் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான இந்திய திறந்த சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை வீரர்கள் அடங்கிய குழுவொன்று அண்மையில் இந்தியா சென்றிந்தது. குறித்த போட்டியில் இலங்கை வீரர்கள் 5 வெள்ளிப்பதக்கங்கள் மற்றும் 11வெண்கலப்பதக்கங்களை சுவீகரித்துள்ளனர். இலங்கை வீரர்களுக்கான முகாமையாளராக சென்செய்.கீர்த்தி பஸநாயக்க, பயிற்றுனராக சென்செய்.Z.A.ரவூவ் ஆகியோர் கடமையாற்றினர். ஆதாரத்திற்கு கிளிக் செய்யவும்

Read More
உள்ளூர் செய்திகள் உள்ளூர் விளையாட்டு மட்டைப்பந்து விளையாட்டு

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் இலங்கையின் முதலாவது பலபரீட்சை இன்று!

உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தகுதிகாண் போட்டிகள் நேற்று ஆரம்பமான நிலையில் இலங்கை அணி இன்று தனது முதலாவது போட்டியில் விளையாடவுள்ளது. ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இந்த போட்டி புலவாயோவில் இலங்கை நேரப்படி மதியம் 12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ஆதாரத்திற்கு கிளிக் செய்யவும்

Read More