இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் நாகைக்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையானது நாளை வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தப்படும் என இந்திய துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த 14 ஆம் திகதி தமிழ்நாட்டின் நாகபட்டினம் துறைமுகத்தில் இருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பித்ததது.

