இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது (ISRO) தனது சந்திரனுக்கான ஆராய்ச்சி தொடர்ச்சியின் மூன்றாம் கட்டத்தை எதிர்வரும் 13ம் திகதி இந்திய நேரப்படி 14.30 மணியளவில் அந்திர பிரதேசம் ஸ்ரீஹாரி கோட்டாவிலுள்ள ஷதிஷ் தவான் ஏவுதளதிலிருந்து
SLV 03 Rocket மூலம் விண்ணில் செலுத்துகிறது. இந்திய மதிப்பில் ரூ. 700 கோடிக்கும் குறைவான செலவில் இத்திட்டம் செய்யப்படுகின்றதென்பது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும் போட்டி நிறைந்த விண்வெளி பயணத்தில் இந்தியாவின் செயல் முன்னணி நாடுகளை கலக்கத்தில் ஆழ்தியுள்ளது. Soft land என்னும் தரையிறக்க செயற்பாடு வெற்றியாளிக்கும் போது நிலவில் தரையிறங்கிய 4ம் நாடாக இந்திய தன்னை உயர்திக்கொள்ளும்.

