பொழுதுபோக்கு

’சதுரங்க வேட்டை’ நட்ராஜ் நடிக்கும் இன்ஃபினிட்டி!

இயக்குநர் சாய் கார்த்திக் இயக்கத்தில் ‘சதுரங்க வேட்டை’ நட்ராஜ் நடிக்கும் ‘இன்ஃபினிடி’ எனும் திரைப்படம் வரும் ஜூலை 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை மென்பனி புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. ‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் நட்ராஜ் சமீபத்தில் மோகன் ஜீ இயக்கத்தில் நடித்த ‘பகாசூரன்’ திரைப்படம் மக்கள் மத்தியில் பல விமர்சனங்களுக்குட்பட்டது.

அதைத் தொடர்ந்து தற்போது இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் வித்யா பிரதீப் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சரவணன் ஸ்ரீ ஒளிப்பதிவு செய்ய, பாலசுப்ரமணியம் இசையமைக்கிறார்.

 
 
Exit mobile version