யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் உள்ள கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டதனால் பரபரப்பு ஏற்படுள்ளது.குறித்த தீ விபத்து இன்று வியாழக்கிழமை நண்பகல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவ்விடத்திற்கு சென்ற யாழ் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீப்பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் வெளியாகவில்லை.

