ஆனி 5, 2026
srilanka
0
  • Your cart is empty
உள்ளூர் செய்திகள் வடக்கு

இந்திய வர்த்தக் குழு யாழிற்கு வருகை.

இந்திய வர்த்தக குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். அந்த வர்த்தக குழு வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் மாகாண அரசாங்க அதிகாரிகளை திங்கட்கிழமை சந்தித்து மாகாணத்தில் பல்வேறு துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சந்திப்பின் போது கைத்தொழில், நகர அபிவிருத்தி அதிகார சபை, முதலீட்டு சபை, கூட்டுறவு, பால் பண்ணை மற்றும் கால்நடை பராமரிப்பு ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Leave feedback about this