ஆனி 5, 2026
srilanka
0
  • Your cart is empty
பொழுதுபோக்கு

ரஜினியின் கடைசிப் படம் ”தலைவர் 171”… லோகேஷ் போட்ட தரமான ஸ்கெட்ச்…

ரஜினிக்கு வில்லனாகும் கமல் ?

தமிழ் சினிமாவில் டாப் இயக்குனர்களின் பட்டியலில் இருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். உலகநாயகனை வைத்து இவர் இயக்கிய விக்ரம் படத்தின் வெற்றியின் மூலம் இந்திய திரையுலகமே அறியப்படும் இயக்குனராக உருவெடுத்தார். தற்போது விஜய்யின் லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். லோகேஷ் அடுத்ததாக ரஜினியின் தலைவர் 171 திரைப்படத்தை இயக்கவுள்ளார் என தகவல்கள் வருகின்றன. லோகேஷ் மற்றும் ரஜினியின் கூட்டணியில் உருவாகவிருக்கும் தலைவர் 171 ஒட்டுமொத்த இந்திய சினிமாவே ஆவலாக எதிர்பார்த்து இருக்கின்றது.

லோகேஷ் விஜய்யின் ‘லியோ’ படத்தை அடுத்து கார்த்தியின் ‘கைதி 2’ படத்தை இயக்குவார் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ரஜினி லோகேஷை அழைத்து அவரின் இயக்கத்தில் ஒரு படம் பண்ணவேண்டும் என கேட்டுக்கொண்டதால், கைதி 2 படத்தை தள்ளி வைத்து விட்டு ரஜினி பட வேலைகளில் இறங்கியுள்ளார் லோகேஷ். மேலும் இப்படம் தான் ரஜினி நடிக்கும் கடைசி படமாகவும் இருக்கும் என ஒரு தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. எனவே தலைவர் 171 திரைப்படத்தை ரஜினிக்கு மறக்கமுடியாத ஒரு வெற்றிப்படமாக கொடுக்கும் நோக்கத்தில் லோகேஷ் இருக்கிறார். ரஜினி மற்றும் லோகேஷ் கூட்டணி முடிவான நிலையில் தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் யாராக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தலைவர் 171 திரைப்படத்தை லியோ தயாரிப்பாளர் லலித் தான் தயாரிப்பார் எனவும்,அல்லது இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். தலைவர் 171 திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதுவும்படத்தில் ரஜினிக்கு வில்லனாக கமல் நடிப்பார் என்றும் தகவல் தற்போது பரபரப்பாக பரவி வருகின்றது. தற்போது வெளியான இந்த தகவல் ரசிகர்களை உச்சகட்ட எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

‘தலைவர் 171’ திரைப்படம் ரஜினியின் கடைசி படம் என்பதால் தன் நண்பருக்காக கமல் வில்லனாக நடிப்பார் என சொல்லப்படுகின்றது.தற்போது ப்ராஜெக்ட் கே என்ற படத்திலும் வில்லனாக கமல் நடித்து வருகின்றார். ரஜினிக்கு வில்லனாக கமல் நடிக்கவுள்ளார் என்ற தகவல் தான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக்காக உள்ளது. இந்த தகவல் உண்மையானால் கமல் ரசிகர்களுக்கு,ரஜினி ரசிகர்களுக்கும் செம விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave feedback about this