தொழில்நுட்ப அமைச்சின் கீழுள்ள DigiEcon 2030 இன் திட்டப் பணிப்பாளர் பிரசாத் சமரவிக்ரம அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் திகதிக்குள் இலங்கையில் அனைத்து அரசாங்க கொடுக்கல் வாங்கல்களும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 தொற்றுநோய்க்குப் பின்னர் இலங்கையில் பெரும்பான்மையான மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவே இந்த நடவடிக்கையை விரைவுபடுத்துவதற்கான காரணம் எனக் குறிப்பிடப்படுகிறது. டிஜிட்டல் மயமாக்கலை விரைவுபடுத்தும் வகையில் தேசிய டிஜிட்டல் பொருளாதார முடுக்கம் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ளார்.

