இந்தியா – இலங்கை இடையே யு.பி.ஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான இந்த ஒப்பந்தத்தால் நிதிநுட்ப இணைப்பு அதிகரிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ககவின் உத்தியோகப்பூர்வ இந்திய விஜயத்தை மேற்கொண்ட போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா – இலங்கை இடையே யு.பி.ஐ பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு புதிய ஒப்பந்தம் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் யு.பி.ஐ பரிவர்த்தனை முறை ஒவ்வொரு ஆண்டும் பிரபலமடைந்து வருகிறது. அத்துடன் யு.பி.ஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும், மதிப்பும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது.
