உள்ளூர் செய்திகள் பொருளாதாரம் வடக்கு

கிளிநொச்சியில் வடக்கு தென்னை முக்கோண வலயத்தை உருவாக்குவதன் அங்குரார்ப்பண நிகழ்வு

கிளிநொச்சியில் வடக்கு தென்னை முக்கோண வலயத்தை உருவாக்குவதன் அங்குரார்ப்பண நிகழ்வும், சர்வதேச தென்னை விழா மற்றும் தென்னை வளர்ப்பாளர்களை கெளரவிக்கும் நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை மாதிரி தென்னை தோட்டம் பகுதியில் குறித்த நிகழ்வு இன்று (02.09.2023) நடைபெற்றுள்ளது. 

இந்நிகழ்வில் அமைச்சர் ரமேஸ் பத்திரன, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லொஹான் ரத்வத்த, நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், தெங்கு அபிவிருத்தி சபை அதிகாரிகள், தென்னை உற்பத்தியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Exit mobile version