உள்ளூர் செய்திகள் யாழ் வடக்கு

சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவருக்கு பதவி உயர்வு

யாழ்.பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளரான தனேஸ்வரி இரவீந்திரன் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.

வணிக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரைப் பேராசிரியராகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

Exit mobile version