ஆடி 29, 2026
srilanka
0
  • Your cart is empty
Uncategorized

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கும் அதிதி சங்கர்!

இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி சங்கர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளியின் தம்பி ஆகாஷ் முரளி, அதிதி சங்கர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்துமுடிந்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக வெளிநாட்டில் நடைபெறவுள்ளது. ரொமாண்டிக் கமர்சியல் படமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் மூலம் ஆகாஷ் முரளி திரைத்துறையில் அறிமுகமாகவுள்ளார்.

மேலும், மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்தில் அதிதி சங்கர் நடித்துள்ளார். அடுத்ததாக இயக்குநர் ‘முண்டாசுப்பட்டி’ ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் உடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave feedback about this