புரட்டாதி 13, 2026
srilanka
0
  • Your cart is empty
பொழுதுபோக்கு

’ஜவான்’ஐ பாராட்டிய லோகேஷ் கனகராஜ்!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தின் டிரெய்லரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளார்.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ஜவான்’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், அந்த டிரெய்லரை இயக்குநர்கள் விக்னேஷ் சிவன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் பாராட்டியுள்ளனர். இதுகுறித்து அவர், ‘ஜவானின் உலகம் பிரமிக்க வைக்கிறது. அனிருத், அட்லீ ஆகியவர்களின் பாலிவுட் எண்ட்ரீ மிகப் பிரமாதமாக அமைந்துள்ளது” எனப் பாராட்டியுள்ளார்.

மேலும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் தனது மனைவியின் கனவு பாலிவுட் எண்ட்ரீயான இந்தப் படத்தின் டிரெய்லரை தனது சமூக வலைதள பக்கத்தில் வெகுவாக பாராட்டியுள்ளார். பாலிவுட்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான இந்தப் படம் வரும் செப்.7ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 
 

Leave feedback about this