இயக்குநர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது.
இயக்குநர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்படக்குழுவால் வரும் ஜூலை 15ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. ’அதிருதா’ எனும் இந்தப் பாடலை டி.ராஜேந்திரன் பாடியுள்ளார். இந்தப் படத்தின் டீசர், டிரெய்லர் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது இந்தப் பாடல் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா, செல்வராகவன், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படம் வரும் விநாயகர் சதூர்த்தியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

