இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிரோட் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தற்போது இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் ஏஷஸ் கிரிக்கெட் தொடர் இடம்பெற்று வருகின்றது. இந்த தொடரை அடுத்து, தாம் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து விலகுவதாக ஸ்டுவர்ட் பிரோட் அறிவித்துள்ளார்.
நேற்று ஜூலை 29 லண்டனில் உள்ள கியா ஓவலில் நடந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் விளையாட்டிலிருந்து விலகுவதற்கான தனது முடிவை அவர் அறிவித்துள்ளார்.
