நடிகர் வடிவேலு நடிக்கவிருக்கும் ஒரு அரசியல் படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் வடிவேலு நடிக்கவிருக்கும் ஒரு அரசியல் படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. விமர்சகர்கள் மத்தியிலும் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றது. மேலும், இந்தத் திரைப்படம் வடிவேலுவுக்கு வெகு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கம்பேக் திரைப்படமாகமே அமைந்தது. இந்நிலையில், அடுத்ததாக வடிவேலு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
இந்தப் படத்தை யார் இயக்கப் போகிறார் என்கிற தகவல் வெளியாகாத நிலையில், இந்தப் படம் ஒரு அரசியல் சார்ந்த படமாக இருக்குமெனப் பேசப்பட்டு வருகிறது. வடிவேலுவை முதன்முதலாக ஒரு குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் ‘தேவர் மகன்’ படத்தில் நடிக்கவைத்தவர் கமல்ஹாசன். இந்நிலையில், இந்தத் தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கும் ‘இந்தியன் -2’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும், நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘ப்ரோஜக்ட் கே’ திரைப்படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிப்பதும் குறிப்பிடத்தக்கது.
