ஆவணி 1, 2026
srilanka
0
  • Your cart is empty
பொழுதுபோக்கு

‘ஜெயிலர்’ படம் பார்க்க விடுமுறை…ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தனியார் நிறுவனம்..!

நெல்சன் இயக்கத்தில், ரஜினி நடித்து ரிலீசுக்கு தயாராகியிருக்கும் ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று’ஜெயிலர்’ படத்தைப் பார்க்க தனது நிறுவனத்தில் பணிப்புரியும் ஊழியர்களுக்கு ஆக.10 விடுப்பு அளித்துள்ளத்து.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமில்லாமல் இப்படத்தில் இடம் பெட்ரா பாடல்கள் ரசிகளிர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘பாட்சா’ படத்திற்கு பிறகு ரஜினியை ஆக்ஷ்ன் ஹீரோவாக காட்டியிருக்கிறார்கள் என்று ரசிகர்கள் இப்படத்தின் ட்ரெய்லரை பார்த்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இப்படத்தில் ரஜினி முத்துவேல் பாண்டியன் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் மோகன்லால் பேசிக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதில், யாரெல்லாம் இந்த கூட்டணியை பார்க்க வெயிட்டிங் என்று ஒரு கேப்ஷனை பதிவிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லரை பார்த்து ரசிகர்கள் இன்னும் ஐந்து நாட்கள் வெய்ட் பண்ணனுமா தலைவரே! என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.இந்நிலையில், தமிழகம் மற்றும் பெங்களூருவில் 8 கிளைகளைக் கொண்ட தனியார் நிறுவனம் ஒன்று ‘ஜெயிலர்’ படத்தை தனது ஊழியர்கள் பார்க்கும் வகையில் 10-ம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ரஜினிகாந்தின் ’ஜெயிலர்’ படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப் படத்திற்காக விடுமுறை வேண்டும் என எங்களது HR டிபார்ட்மெண்டுக்கு விடுப்பு விண்ணப்பங்கள் வருவதைத் தடுக்கும் வகையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்க முடிவெடுத்துள்ளோம். மேலும் பணியாளர்களுக்கு படத்தின் டிக்கெட்டுகளை இலவசமாக வழங்குகிறோம்.

இது எங்கள் நிறுவனத்தின் சென்னை, பெங்களூர், திருச்சி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் மற்றும் அழகப்பன் நகரில் உள்ள அனைத்து கிளைகளுக்கும் பொருந்தும். நம் தாத்தாவுக்கும், நம் அப்பாவுக்கும், நமக்கும், நம் பிள்ளைகள் மற்றும் பேரன்களுக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்’ என்று குறிப்பிட்டதோடு ‘ரஜினிகாந்த் வாழ்க’ என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கண்ட ரசிகர்கள் தலைவர் என்னைக்குமே மாஸ், எங்களின் நேரம் சூப்பர் ஸ்டாருக்கே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave feedback about this