நடிகர்கள் அதர்வா – மணிகண்டன் நடிக்கும் ‘மாதகம்’ வெப் சீரீஸின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பிரசாந்த் முருகேசன் இயக்கத்தில் அதர்வா – மணிகண்டன் நடிக்கும் ‘மாதகம்’ வெப் சீரீஸின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. கிரைம் ஆக்ஷன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த சீரீஸ் ஒரு போலீஸுக்கும் கேங்க்ஸ்டருக்கும் இடையே நடக்கும் விறுவிறுப்பான கதையாக உருவாகியுள்ளது. இந்த சீரீஸை ஒஇயக்கும் பிரசாந்த் முருகேசன், இதற்கு முன்பு ‘கிடாரி’ எனும் படத்தை இயக்கியுள்ளார். மேலும் ‘குயின்’ எனும் வெப் சீரீஸையும் இயக்கியுள்ளார்.
இந்த சீரீஸில் கௌதம் வாசுதேவ் மேனன், நிகிலா விமல், திவ்யதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த சீரீஸிற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும், இதில் வடிவுக்கசி, ‘அருவி’ திருநாவுக்கரசு, இளவரசு ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
