யாரை ஏற்றுக்கொள்ள வேண்டும் யாரை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பது பொதுச் செயலாளருக்குத் தெரியும். மீண்டும் துரோகம் செய்தால் கண்டிப்பாக இபிஎஸ் பொறுமையாக இருக்க மாட்டார். ஓபிஎஸ் மற்றும் வைத்தியலிங்கம் தவறை உணர்ந்து வந்தால் சேர்த்துக் கொள்ளலாம். திமுக அரசை வீழ்த்துவது தான் அ.தி.முகவின் கடமை’ என எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட திருநகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக ஆர்.ஒ பிளானட் சுத்திகரிப்பு குடிநீர் நிலைய புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ” தேர்தல் ஆணையம் அறிவித்த அறிவிப்பு ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான் ஏனென்றால் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினர்கள் மக்கள் ஆதரவு அத்தனையுமே எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்டு இணையத்தில் வெளியிட்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி தமிழக மக்களுக்கு வழி காட்டுகின்ற வாய்ப்பாக எங்களுக்குக் கிடைத்துள்ளது.
கடிதம் கொடுத்தால் சேர்த்துக் கொள்ளப்படும் என்பது அ.தி.மு.கவின் நடைமுறை மன்னிப்பு கடிதம் கொடுத்தால் இயக்கத்தில் தொண்டராகச் சேர்த்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. பொதுச் செயலாளர் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் தோல்வி மீது தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறவர்கள் போராடிப் போராடி தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஓபிஎஸ் மற்றும் வைத்தியலிங்கம் அவர்களுக்காக மறைமுகமாக மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டு அதிமுகவில் மறைமுகமாக அழைப்பாக இருக்கலாம் என்று நான் சந்தேகிக்கிறேன்.
ஓபிஎஸ் தன் தவறை உணர்ந்து பொதுச் செயலாளரிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்.
மக்கள் பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கிறது தக்காளி விலையிலிருந்து இஞ்சி விலை வரை ஏறிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட குற்றவாளிகளை எடப்பாடியாரால் அடையாளம் காட்டப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பணம் செய்யப்பட்டது. மீண்டும் அதனைச் சொல்லி ஏதோ ஒரு குறுகிய நோக்கத்தோடு யாருடைய பெயராவது அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் முயல்கிறார்கள் எந்த முயற்சி எடுத்தாலும் அவை தோற்றுப் போகும். அவர்கள் எடுக்கும் முயற்சி நல்ல காரணத்திற்காகப் போராட வேண்டும் மக்கள் பிரச்சினைக்காகப் போராட வேண்டும் உண்மைக்காகப் போராட வேண்டும் குறுகிய நோக்கத்தில் தங்களுடைய சுயநலத்திற்காகப் போராடினால் அவை மக்கள் மத்தியில் எடுபடாது.
திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் அறிக்கையின் சரி பிரச்சார கூட்டங்களிலும் சரி முரண்பாடாகத் தான் நடந்து கொண்டிருக்கிறது தவிர எதுவுமே சரியாக இது வரை நடக்கவில்லை. இன்றைக்கு மதுக் கடைகளை மூட வேண்டும் என்ற உணர்வோடு இருக்கும் பொழுது காலையில் பள்ளி மாணவர்கள் செல்லக்கூடிய நேரம் ஏழு முதல் ஒன்பது மணி என்பது பள்ளி மாணவ மாணவிகள் செல்லக்கூடிய நேரத்தில் மதுக் கடைகளைத் திறக்க வேண்டும் என்று கோரிக்கைகளைப் பரிசீலனை செய்வதைத் தவறு என யாராவது கோரிக்கை கொடுத்தார்களா அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்கிறோம் என்றாலே மிகப்பெரிய தவறு இது போன்ற செயல்களை திமுக கையாளுமானால் ஏற்கனவே தோல்வி அடைந்து கொண்டிருக்கிறது வீழ்ந்து கொண்டிருக்கிறது.
மக்கள் பிரச்சனைகளை அவர்களால் தீர்க்க முடியவில்லை மகளிர் உதவித்தொகையை முறையாகக் கையாளப் போவதில்லை நடைமுறையில் தெரிந்து விட்டது. பொருளாதாரத்தை மிச்சம் பண்ணுவதற்காகவே செய்கிறார்கள். எந்த திட்டத்தை முறைப்படி நிர்வாக ரீதியாகச் செய்யவில்லை நிர்வாக திமுக நிர்வாக ரீதியாகத் தோல்வி அடைந்திருக்கிறது அரசு அலுவலர்களைச் சரியாகப் பயன்படுத்தவில்லை காவல்துறையைச் சரியா பயன்படுத்த முடியவில்லை.
யாரை ஏற்றுக்கொள்ள வேண்டும் யாரை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பது பொதுச் செயலாளருக்குத் தெரியும். மீண்டும் துரோகம் செய்தால் கண்டிப்பாக இபிஎஸ் பொறுமையாக இருக்க மாட்டார். ஓபிஎஸ் மற்றும் வைத்தியலிங்கம் தவறை உணர்ந்து வந்தால் சேர்த்துக் கொள்ளலாம். திமுக அரசை வீழ்த்துவது தான் அ.தி.முகவின் கடமை” என்றார்.
