பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தின் ஓடிடி ரைட்ஸ் மிகப்பெரும் தொகைக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘சலார்’. இந்தப் படம் வரும் செப். 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்தாண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக உருவாகி வரும் இந்தப் படம் நிச்சயம் வசூலில் பல சாதனை படைக்குமென திரைத்துறை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ஓடிடி ரைட்ஸ் ஒரு பெரிய தொகைக்கு விற்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 200 கோடி ரூபாய்க்கு இந்தப் படத்தின் ஓடிடி ரைட்ஸ் விற்கப்பட்டதாக பரவலாகப் பேசப்படுகிறது.
