புரட்டாதி 15, 2026
srilanka
0
  • Your cart is empty

உள்ளூர் செய்திகள்

உள்ளூர் செய்திகள்

உள்ளூர் செய்திகள்

விலை குறைப்பு

பாடசாலை புத்தகப் பைகள் மற்றும் காலணிகள் என்பவற்றின் விலைகள் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். அத்துடன், பாடசாலை புத்தகப் பைகள் மற்றும் காலணிகள் என்பவற்றின் விலை 10 வீதத்தால் குறைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

Read More
உள்ளூர் செய்திகள்

பிரான்ஸ் ஜனாதிபதியின் இலங்கை வருகை.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாளை 28ஆம் திகதி பிற்பகல் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் இதுவாகும். பிரான்ஸ் ஜனாதிபதி தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்கள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

Read More
உள்ளூர் செய்திகள்

கட்டாயமாக்கப்படும் நடைமுறை

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் செயல்படுத்தப்படும் கட்டாய நடைமுறை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அமைச்சரவை தீர்மானத்தின் படி சுகாதார அமைச்சின் மூத்த மற்றும் இளநிலை நிர்வாக அதிகாரிகள் கைரேகை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி மேலதிக கடமை கொடுப்பனவுகளைப் பெறும் சுகாதார அமைச்சின் மருத்துவ நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய நிறைவேற்று தர உத்தியோகத்தர்களின் தினசரி வருகை மற்றும் புறப்பாடுகளுக்கு கைரேகை

Read More
உள்ளூர் செய்திகள்

கைச்சாத்தானது ஒப்பந்தம்

சிறிலங்கா விவசாய அபிவிருத்தி திணைக்களம், இலங்கை உழவர் மன்றம் மற்றும் அஃரோ வேர்ல்ட் பிரைவேட் லிமிடெட் ஆகிய 3 நிறுவனங்களும் ஒன்றாகக் கரம் கோர்த்து விவசாயத்துறையில் நிலையான மற்றும் முன்னேற்றத்திற்கான புதிய மைல்கல்லாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் இன்று கைச்சாத்திடப்பட்டன.  இன்று காலை 8.30 முதல் 9.00 மணி வரை, கொழும்பு 07 இல் அமைந்துள்ள கமநல அபிவிருத்தி திணைக்கள அலுவலகத்தில் வைத்து இந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டுள்ளது.

Read More
உள்ளூர் செய்திகள்

இந்திய முட்டைகள்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் இன்று முதல் விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.சதோச மற்றும் பல்பொருள் அங்காடிகள் மூலம் அந்த முட்டைகள் விற்பனை செய்யப்படவுள்ளது.

Read More
உள்ளூர் செய்திகள் கிளிநொச்சி முல்லைத்தீவு வடக்கு

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடரும் வரட்சி காரணமாக பல்வேறு இடங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு காணப்படுவதுடன் கால்நடைகளும் குடிநீரின்றி அலையும் நிலை உருவாகியுள்ளதாக தெரியவருகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் அம்பலப்பெருமாள் குளம், ஆரோக்கியபுரம், அமைதிபுரம், கோட்டைகட்டி, துணுக்காய், ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் நிலவும் வரட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு உருவாகியுள்ளது.

Read More
பொருளாதாரம்

இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய  நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை  336.16 ரூபாவாகவும், கொள்வனவு விலை  323.03 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. கனேடிய டொலரின் விற்பனை விலை   256.99 ரூபாவாகவும், கொள்வனவு விலை     243.88 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி  374.29 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி      356.33 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி    433.09 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி     413.53 ரூபாவாகவும்

Read More
உள்ளூர் செய்திகள்

சினொபெக்கின் முதலாவது எரிபொருள் கப்பல்.

சீனாவின் சினொபெக் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி, அடுத்த மாத முதல் வாரத்தில் முதலாவது எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடையுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக தெரிவித்தார்.  

Read More
உள்ளூர் செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைப்பிற்கு எதிரான மனு

2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஜூலை 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More
உள்ளூர் செய்திகள்

காங்கேசன்துறை – இந்தியா இடையே பயணிகள் கப்பல்

இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க இன்னும் 6 மாதங்கள் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாகப்பட்டினத்தில் பயணிகள் முனையம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியுள்ளதாகவும், பணிகள் முடிவடைய இன்னும் 4 முதல் 5 மாதங்கள் ஆகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.,

Read More