புரட்டாதி 15, 2026
srilanka
0
  • Your cart is empty

உள்ளூர் செய்திகள்

உள்ளூர் செய்திகள்

உள்ளூர் செய்திகள் யாழ் வடக்கு

யாழ்ப்பாணம் கோண்டாவில் தீ

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் உள்ள கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டதனால் பரபரப்பு ஏற்படுள்ளது.குறித்த தீ விபத்து இன்று வியாழக்கிழமை நண்பகல்  ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவ்விடத்திற்கு சென்ற யாழ் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீப்பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் தீ விபத்து ஏற்பட்டமைக்கான  காரணம்  வெளியாகவில்லை.

Read More
உள்ளூர் செய்திகள் பொருளாதாரம்

மத்திய வங்கியின் விசேட அறிவித்தல்

உள்ளூர் கொடுக்கல் வாங்கல்களுக்கு இலங்கையில் செல்லுபடியாகும் நாணயமாக இலங்கை ரூபாவே இருக்கும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.  இந்திய ரூபாய் குறித்து தற்போது பரவி வரும் தவறான கருத்துகளை தெளிவுபடுத்தும் வகையில் இலங்கை மத்திய வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Read More
உள்ளூர் செய்திகள் மன்னார் முல்லைத்தீவு யாழ் வடக்கு

இரண்டாவது தென்னை முக்கோண வலயம்!

பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவை மையமாக கொண்டு வட மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோண வலயத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதுத் தெரிவித்துள்ளார்.

Read More
பொழுதுபோக்கு

ரஜினியின் கடைசிப் படம் ”தலைவர் 171”… லோகேஷ் போட்ட தரமான ஸ்கெட்ச்…

ரஜினிக்கு வில்லனாகும் கமல் ? தமிழ் சினிமாவில் டாப் இயக்குனர்களின் பட்டியலில் இருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். உலகநாயகனை வைத்து இவர் இயக்கிய விக்ரம் படத்தின் வெற்றியின் மூலம் இந்திய திரையுலகமே அறியப்படும் இயக்குனராக உருவெடுத்தார். தற்போது விஜய்யின் லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். லோகேஷ் அடுத்ததாக ரஜினியின் தலைவர் 171 திரைப்படத்தை இயக்கவுள்ளார் என தகவல்கள் வருகின்றன. லோகேஷ் மற்றும் ரஜினியின் கூட்டணியில் உருவாகவிருக்கும் தலைவர் 171 ஒட்டுமொத்த இந்திய சினிமாவே ஆவலாக எதிர்பார்த்து இருக்கின்றது.

Read More
உள்ளூர் செய்திகள் வடக்கு

இந்திய வர்த்தக் குழு யாழிற்கு வருகை.

இந்திய வர்த்தக குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். அந்த வர்த்தக குழு வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் மாகாண அரசாங்க அதிகாரிகளை திங்கட்கிழமை சந்தித்து மாகாணத்தில் பல்வேறு துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சந்திப்பின் போது கைத்தொழில், நகர அபிவிருத்தி அதிகார சபை, முதலீட்டு சபை, கூட்டுறவு, பால் பண்ணை மற்றும் கால்நடை பராமரிப்பு ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள்

Read More
உள்ளூர் செய்திகள்

வவுனியா சிறைச்சாலை முடக்கம்

வவுனியா சிறைச்சாலை 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு சின்னம்மை நோய் ஏற்பட்டுள்ளமையால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Read More
உள்ளூர் செய்திகள் யாழ் வடக்கு

சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவருக்கு பதவி உயர்வு

யாழ்.பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளரான தனேஸ்வரி இரவீந்திரன் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. வணிக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரைப் பேராசிரியராகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

Read More
உள்ளூர் செய்திகள்

புதிய ஒப்பந்தம்

ஜப்பானுக்கும், இலங்கைக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் தொடர்பில் ஜப்பானின் ஊடக மற்றும் இராஜதந்திர துறைக்கான பிரதிப்பணிப்பாளர் நாயகம் யுகிகோ ஒகானோ, இலங்கை ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளார். ஜப்பானின் பரிசீலனைக்காக இலங்கை அரசாங்கத்தினால் பல முதலீட்டு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், ஜப்பானின் தற்போதைய கவனம், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு முடிந்தவரை விரைவாகவும், சுமுகமாகவும் உதவுவதாக மட்டுமே இருக்கும் என்று ஒகானோ கூறியுள்ளார்.

Read More
உள்ளூர் செய்திகள்

ஜப்பான் செல்ல இலங்கை அரச அதிகாரிகளுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் புதிய ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த தகவலை இன்றைய தினம் கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையின் அரச துறையில் பணியாற்றும் இளம் நிறைவேற்று அதிகாரிகளுக்கு ஜப்பானிய பல்கலைக்கழகங்களில் பயிற்சியளிக்க சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.

Read More
உள்ளூர் செய்திகள் யாழ் வடக்கு

யாழ் முத்தமிழ் விழா

யாழ்பாண மாநகர சபையின் முத்தழிழ் விழா இன்றைய தினம்(29) 4.30 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது. ஐ.பி. சி தமிழின் அணுசரனையின் கீழ் துர்க்காதேவி மணி மண்டபத்தில் யாழ் மாநகர சபயின் ஆணையாளர் இ. த. ஜெயசீலன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றுக்கொண்டுள்ளது. இவ்விழாவில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுனர் திருமதி பி.எஸ். எம் சார்ள்ஸ், சிறப்பு விருந்தினர்களாக ஐ.பி.சி தமிழ் குழுமத்தின் தலைவர் க.பாஸ்கரன், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் ஆகியோர் கலந்து விழாவை சிறப்பித்துக் கொண்டுள்ளனர்.

Read More