நிலநடுக்கம் 2.6
இன்று (21) காலை 9.06 மணியளவில் 2.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் இதனை உறுதி செய்துள்ளது.
உள்ளூர் செய்திகள்
இன்று (21) காலை 9.06 மணியளவில் 2.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் இதனை உறுதி செய்துள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி நடைபெறும் கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2023, நவம்பர் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் 21 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
ஜப்பான் கடல் சார் தற்காப்புப் படையின் சமிடரே கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்த கப்பல் சிறிலங்கா கடற்படையின் மரபுகளுக்கு அமைய வரவேற்கப்பட்டுள்ளது. ஜப்பான் கடல் சார் தற்காப்புப் படையின் சமிடரே கப்பல் 151 மீற்றர் கொண்டதுடன், 195 பேர் கொண்ட குழு உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படுகிறது.
வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மதிப்பீட்டிற்குப் பின் அடுத்த மாதம் முதல் இந்த ஒதுக்கீடு அதிகரிக்கப்படவுள்ளது. அடுத்த 6 மாதங்களுக்கான எரிபொருள் திட்டம் தொடர்பில் இன்று இலங்கை கனிய வள கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கலந்துரையாடலின் பின்னர் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் அவர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
இலங்கையில் தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் சேவையின், ஒருநாள் சேவையை வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் குருநாகலையில் பெற்றுகொள்ளலாம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(19) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளைக்கான கேள்வி நேரத்தின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா ஆரம்பமாகியுள்ளது. பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமையில் இன்று ஆரம்பமானது. பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மூன்று நாள்களில் 8 அமர்வுகளாக இடம்பெறவுள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் 2 ஆயிரத்து 278 பேர் பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும் பெறவுள்ளனர்.
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை , 2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர, உயர்தரப் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 28 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது. இந்நிலையில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இணையத்தளத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் குறித்த திகதிக்குப் பின்னர் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் முட்டை விலை தொடர்பில் இந்த வார இறுதிக்குள் தீர்மானம் எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எம்.பி.அத்தபத்து தெரிவித்துள்ளார். முட்டை ஒன்றின் விலையை 50 ரூபாவுக்கு குறைப்பதுதான் எங்கள் திட்டம் என தெரிவித்துள்ளார்.
யாழ் நாவாந்துறை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.இச்சம்பவம் 17-08-2023 இரவு ஏற்பட்டுள்ளது.சம்பவ இடத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.