புரட்டாதி 16, 2026
srilanka
0
  • Your cart is empty

உள்ளூர் செய்திகள்

உள்ளூர் செய்திகள்

உள்ளூர் செய்திகள் யாழ் வடக்கு

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியும் அதனது தாய்க் கல்வி நிறுவனமான பற்றிக்கோட்ட செமினரியினதும் 200ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பழைய மாணவர் ஒன்றுகூடல் வாரம் ஆரம்பமானது. ஆரம்ப நிகழ்வாகப் பழைய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனபவனி இன்று (15.07.2023) காலை 7 மணியளவில் கல்லூரி வாயிலில் இருந்து ஆரம்பமாகி, கோட்டைக்காடு, அராலி, செட்டியார்மடம், துணவி, நவாலி, ஆனைக்கோட்டை, மானிப்பாய், சண்டிலிப்பாய், பண்டத்தரிப்பு, சித்தங்கேணி, வட்டுகோட்டை வழியாக யாழ்ப்பாணக் கல்லூரியினை வந்தடைந்தது.

Read More
உள்ளூர் செய்திகள் கல்வி

கல்வி முறைமையில் மாற்றம்

இலங்கையின் பல்கலைக்கழக கல்வி முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். 2030ஆம் ஆண்டில் சர்வதேச தரத்திலான மாணவர்களை உருவாக்கும் வகையில் இந்த மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.                                            

Read More
உள்ளூர் செய்திகள்

திரிபோஷ உற்பத்தி வழமைக்கு

திரிபோஷ உற்பத்தி மற்றும் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளதாக திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார். உற்பத்தி மூலப் பொருள் பற்றாக்குறை காரணமாக சிறிது காலம் தடைப்பட்டிருந்த திரிபோஷ உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகள் தற்போது வழமை போன்று இடம்பெற்று வருவதாகவும், தற்போது மாதமொன்றுக்கு 13 இலட்சம் திரிபோஷா பொதிகள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Read More
இந்தியா தொழில்நுட்பம் வெளிநாட்டு செய்தி

விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 3

சந்திரயான் 3  LVM M4 மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹாரி கோட்டாவில் இருந்து சற்று நேரத்திட்கு முன் 1435 இந்திய நேரத்திற்கு விண்ணில் பாyந்தது. சந்திரயான் 1 2008 லும், சந்திரயான் 2 2019 லும்,  சந்திரயான் 3 2023 லும் செலுத்தப்பட்டன. நிலவில் நீரினை கண்டறிந்தது சந்திரயான் 1 என்பது முக்கியத்துவம் பெறுகின்றது.  சந்திரயான் 3 இந்திய விண்வெளி வரலாற்றிலும் உலக அளவிலும் ஒரு முக்கியம் பெரும் என்பது சகலரினதும் நம்பிக்கை.    

Read More
உள்ளூர் செய்திகள் பொருளாதாரம்

திடீரென உயர்ந்த டொலரின் பெறுமதி

நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது  இன்றையதினம்(14.07.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (14.07.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை  324.67 ரூபாவாகவும், கொள்வனவு விலை 310.49 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 249.34 ரூபாவாகவும், கொள்வனவு விலை  235.46 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 366.06 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி   347.62 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி  427.31 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி  406.68 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.  

Read More
பொழுதுபோக்கு

டி.ஆர் குரலில் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

இயக்குநர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது. இயக்குநர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்படக்குழுவால் வரும் ஜூலை 15ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. ’அதிருதா’ எனும் இந்தப் பாடலை டி.ராஜேந்திரன் பாடியுள்ளார். இந்தப் படத்தின் டீசர், டிரெய்லர் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது இந்தப் பாடல் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில்

Read More
உள்ளூர் செய்திகள்

அரச ஊழியர்களுக்கான விடுமுறை தொடர்பில் புதிய நடைமுறை

அரச ஊழியர்களுக்கு சம்பளம் இன்றி விடுமுறை எடுக்கும் முறையொன்றை பொது நிர்வாக அமைச்சு அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. அதற்கமைய, உரிய விடுமுறை எடுக்கும் அரச ஊழியர்களுக்கு வெளிநாடு செல்ல அல்லது இலங்கையில் தங்க வாய்ப்பு கிடைக்கும். அந்தந்த விடுமுறையை எடுக்கும் போது அவர்களின் வயது மூப்பு அல்லது ஓய்வூதியத்திற்கு எந்தத் தடையும் இருக்காது என பொது நிர்வாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Read More
உள்ளூர் செய்திகள் யாழ்

யாழ்ப்பாணம் வந்த தொடருந்து

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி விசேட தொடருந்து இன்று வியாழக்கிழமை(13) பயணித்தது. இந்த விசேட தொடருந்து ல் போக்குவரத்து, பெருந் தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன உட்பட்ட ரயில்வே திணைக்கள அதிகாரிகள் அனுராதபுரம்- வவுனியா வரையில் அமைக்கப்பட்ட புதிய தொடருந்து பாதை அமைப்பின் கண்காணிப்பு நடவடிக்கையாக யாழ்ப்பாணம் வருகை தந்தனர்.

Read More
உள்ளூர் செய்திகள்

மீண்டும் பரவும் தட்டம்மை

நாட்டில் 2019 ஆம் ஆண்டு தட்டம்மை நோய் ஒழிக்கப்பட்ட போதிலும், நாட்டில் மீண்டும் தட்டம்மை நோயாளர்கள் பதிவாகி வருவதாக தொற்று நோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பதிவாகியுள்ள நோயாளர்கள் தட்டம்மை தடுப்பூசி போடப்படாதவர்கள் எனவும், 2010 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கையிலும் உலகிலும் சிறுவர்களுக்கான தடுப்பூசிகள் பற்றாக்குறையாக காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை தொற்றுநோயியல் திணைக்களத்தின் பணிப்பாளர் சமித்த கினிகே சுட்டிக்காட்டியிருந்தார். அதேசமயம் அறிவியல்பூர்வமற்ற காரணங்களால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட பெற்றோர் நடவடிக்கை எடுக்காதது பெரும் பிரச்சினையாகி வருவதாக கூறப்படுகிறது.

Read More